மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் கடவுளவும் மனித நனவிலியில் இருக்கு குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு எனவும் குற்ற உணர்ச்சியின் அளவைப்பொறுத்து பக்தியின் விச்சு அமையும் என்பது பிராய்டின் கருத்தாக்கம். இன்றய் நுகர்வு கலாச்சாரத்தில் மதமும் கடவுளும் வீரியத்துடன் அனுகபடுவது பிராய்டின் கருத்தாக்கத்தை நிறுவுவதாகவே உள்ளது. முந்தய காலகட்டத்தில் உழைக்கும் மக்களிடம் கடவுள் நம்பிக்கை அவர்கள் தொழில் சார்ந்தும் கொண்டாட்ட உணர்வு சார்ந்துமே வெளிப்பட்டது. பெருந்தெய்வ வழிபாடு முற்றிலும் அவர்களுகு அன்னியமாக நில உடமை அதிகார உடமை சமுகத்தாருக்குமான ஒரு விடயமாக அமைந்த்து. உழைக்கும் மக்களிடம் அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கான போராட்டமே முதன்மையாக இருந்ததால் அவர்களிடம் பக்தி இளைப்பறுவதற்கான பக்தியாக மட்டுமே இருந்ததால் அவர்களிடன் குற்ற உணர்வின் அளவும் குறைந்த அளவே வெளிப்பட்டது அதாவது மதம் சார்ந்த உணர்வுகள்.. அதே சமயம் நில உடமை அதிகார சமுத்தார் பெருளாதார நிலையில் உயர்ந்த இடத்தில் இருந்தால் வயிற்றுப்பாட்டை மீறிய ஒரு அடையாளமாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை சில சமயம் அதையே தன் வாழ்வியல் லட்சியமாக முன்னிறுத்தி கோவில் குளம் வெட்டுதல் பகட்டான சடங்குகள் என தீவிர பக்தி வழியாக தமது அதீத குற்ற உணர்வையும் வெளிப்படுத்துவர்
இன்றய சந்தை பொருளாதர சூழலில் திறமைகளை நிறுபித்து தன்னை பணியிடத்தில் தொடந்து ஸ்தாபிக்க வேண்டிய நெருக்கடியிலும்..நம்மையும் மீறி நம் மீது திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரத்திலும் இன்றய சமுக மனிதனின் மனம் அதீத குற்ற உணர்வாலும் நரம்பு நோய் குறியிடுகளாலும் ஒரு வித குழப்ப நிலையில்.. மதத்தின் மீதும் கடவுளின் மீதும் ஒரு வித கேள்விகள் மீறிய பந்ததிற்கு ஆளாகிறார்கள்... அவர்கள் தொழில் நுட்ப உலகில் இருந்தாலும் அதையும் மீறிய நம்பிக்கைக்கு ஆளாவது இந்த குற்ற உணர்வின் வெளிப்பாடே.. அதற்கு இன்றய கார்பரேட் சாமியர்களும் ராசிககல் நிபுணரும், பெரியரியல் பேரரசுகளுகே சான்று
2 Comments:
மிக அருமையான பதிவு வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு கருத்து
மிக அருமையான பதிவு
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home